சிறப்புற இடம்பெற்ற அதிபர் குககுமாரியின் மணிவிழா

நல்லூர் தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வர வித்தியாலயத்தின் அதிபராகப் பணியாற்றி பணியோய்வு பெற்ற குககுமாரி விஜயரகுநாதனின் (அம்பாள்) மணிவிழா 10.11.2017 வெள்ளிக்கிழமை கொட்டும் மழையின் மத்தியிலும் வித்தியாலய மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது. .
.
பாடசாலையின் உபஅதிபர் மாலினி பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் போது விழா நாயகியும் அவரது துணைவராகிய ஓய்வு பெற்ற கணக்காளர் மு.விஜயரகுநாதனும் பாடசாலைக்கு அருகில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.
.
ஆசியுரைகளை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், யாழ். சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் வண.ஜாக்கிரத் சைதன்ய சுவாமிகள் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்வில் வாழ்த்துரைகளை வாழ்நாட் பேராசிரியர்களான பொன்.பாலசுந்தரம்பிள்ளை, அ.சண்முகதாஸ் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர்களான சி.சிவலிங்கராஜா, மா.சின்னத்தம்பி, க.தேவராஜா , யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி ச.அமிர்தலிங்கம், யாழ். வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.அகிலதாஸ், வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் ப. விக்னேஸ்வரன், பாடசாலை ஆசிரியர் ஏ.எஸ். சாள்ஸ், இந்து மகளிர் கல்லூரி அதிபர் மிமிலாதேவி விமலநாதன், வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் வேணுகா சண்முகரட்ணம், ஓய்வுநிலை ஆசிரியர் நி.பஞ்சலிங்கம் ஆகியோர் வழங்கினர்.
.
விழாநாயகியின் பெருமைகளைத் தாங்கிய குகஒளி மணிவிழா மலரின் வெளியீட்டுரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் ஆற்றினார்.
.
பாராட்டுரைகளை வித்தியாலய ஆசிரியர் பு.கணநாதன், திறந்த பல்கலைக்கழக யாழ். பிராந்திய உதவிக் கல்விப் பணிப்பாளர் கி.கந்தவேல், நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலய அதிபர் ம.கஜேந்திரன், பாசையூர் சென். அன்ரனீஸ் பெண்கள் பாடசாலை அதிபர் எஸ்.பேரின்பம், ஓய்வு பெற்ற யாழ். கோட்டக் கல்விப் பணிப்பாளர் சு.சண்முககுமார், யாழ்.கோட்டக் கல்விப் பணிப்பாளர் சி.தேவகுமாரன் ஆகியோர் வழங்கினர்.
.
பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
.
விழாவில் உரையாற்றியவா்கள் விழா நாயகியின் கல்விசாா் சேவைகளை நயந்ததோடு அவரது கூட்டுக் குடும்ப வாழ்வியல் பற்றியும் சமூகப் பணிகள் பற்றியும் விதந்து பாராட்டிப் பேசினா் என்பது குறிப்பிடத்தக்கது.