காதலனை கல்யாணம் செய்வதற்காக யாழ் யுவதி நடாத்திய திருவிளையாடல்!! அதிர்ச்சியில் தந்தை வைத்தியசாலையில்!!

தனது காதலனைக் கைப் பிடிப்பதற்காக யாழில் அரச உத்தியோகத்தராக வேலை செய்யும் யுவதி ஒருவர் நடாத்திய திருவிளையாடலால் யுவதியின் தந்தை அதிர்ச்சியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி ஏ.எல் படிக்கும் போது தனது வயது இளைஞன் ஒருவனைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் யாழில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயின்று வந்துள்ளனர்.

யுவதிக்கும் இளைஞனுக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் யுவதி முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை எடுத்து சித்தியடைந்து யாழில் உள்ள அலுவலகம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

யுவதியின் இரு அண்ணன்களும் ஒரு அக்காவும் திருமணமாகி வெளிநாட்டில் வாழ்ந்து வருவதுடன் பெற்றோருடன் சேர்ந்து யுவதிக்கு கலியாணப் பேச்சையும் ஆரம்பித்துள்ளனர்.

டொக்டர், இஞ்சினியர் போன்ற மாப்பிளைகளையே யுவதிக்கு திருமணம் முடித்து வைப்பதற்காக புறோக்கர்கள் சிலரிடம் குறிப்பும் கொடுத்துள்ளார்கள்.

அவர்களும் யுவதிக்கு பல மாப்பிளைகளை பேசிக் கொண்டு வரவே யுவதி மிகவும் குழம்பிப் போயுள்ளார். தனது காதலனுக்கு இது தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார்.

காதலன் தொழில்நுட்பக் கல்லுாரியில் இறுதியாண்டு கற்று 6 மாத பயிற்சிக்காக யாழில் உள்ள ஒரு அலுவலகத்தில் சேர்ந்துள்ளார்.

இதனை வைத்தே இளைஞனான காதலனும் அவனது நண்பர்களும் திட்டம் போட்டு பெண் அரச அலுவலரான காதலிக்கு தமது திட்டத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.

காரியங்கள் கன கச்சிதமாக நகரத் தொடங்கின.

யுவதியின் வீட்டுக்கு குறிப்புடன் ஒரு புறோக்கர் வந்து இஞ்சினியர் மாப்பிளை என கூறி இளைஞனின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளார்.

மிகவும் திட்டமிட்டு பொருந்தக்கூடியவாறே ஜாதகமும் தயாரிக்கப்பட்டுள்ளது. பொருத்தம் பார்த்த யுவதியின் பெற்றோர் ஜாதகம் நல்ல பொருத்தம் என்றவுடன் இளைஞனின் வீட்டாருடன் கதைப்பதற்கு முயன்றுள்ளனர்.

இளைஞனுக்கு தந்தை இல்லை. தாயுடனும் திருமணமாகாத தங்கையுடனுமே இளைஞன் வாழ்ந்து வந்ததுடன் யாழில் உள்ள ஒரு நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலையும் செய்து வந்துள்ளார்.

குறித்த தகவல்கள் எல்லாம் மறைக்கப்பட்டு தாயாருக்குப் பதிலாக இளைஞனின் நண்பன் ஒருவனின் தாய், தந்தையுடன் பெண் பார்க்கும் படலம் முடிவுற்றுள்ளது.

தாயார் விதவையானபடியால் பெண் பார்க்கவரவில்லை எனவும் கூறியுள்ளார்கள். சம்மந்தக் கலப்பும் முடிவுற்று திருமணத்துக்கு நாளும் குறிக்கப்பட்டுள்ளர்.

இந் நிலையில் மாப்பிளையின் தராதரம் என்ன? மாப்பிளையின் வேலை என்ன என்பது அனைத்தையும் யாரோ ஒருவர் பெண் வீட்டாருக்கு போட்டுக் கொடுத்துள்ளார்கள்.

இதனையடுத்து விசாரித்து உண்மையை அறிந்த தந்தை திருமணத்தை நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால் கலியாணம் நின்றால் தனக்கு அவமானம் எனத் தெரிவித்து குறித்த யுவதி அந்த இளைஞனையே திருமணம் முடித்து வைக்கச் சொல்லி கேட்டு அடம் பிடித்ததாக தெரியவருகின்றது.

யுவதியும் இளைஞனும் ஏற்கனவே காதலர்கள் என்பதையும் தந்தை அறிந்தவுடன்  நெஞ்சு வலியால் யாழ் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தற்போது வெளிநாட்டில் உள்ள சகோதரர்கள் இலங்கைக்கு விரைந்து வருவதாகவும் அவர்களிடம் யுவதி தனது காதல் பற்றி தெரியப்படுத்தியுள்ளதாகவும் தந்தை குணமடைந்தவுடன்  அனேகமாக யுவதி குறித்த காதலனையே திருமணம் முடிக்க சந்தர்ப்பம் இருப்பதாக மாப்பிளையின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Allgemein