முள்ளிவாய்க்காலில் இன்று மீட்கப்பட்ட இன்னுமோர் அவலம்!

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட முள்ளிவாய்கால் கிழக்குப் பகுதியில் ஒருதொகை மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்தே மேற்படி ஐம்பது வரையிலான மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட முள்ளிவாய்கால் கிழக்கு பகுதியில் பாக்கியநாதன் மரியமலர் என்பவருடைய காணியிலிருந்து குறித்த மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியில், அவர் வசிக்கும் வீட்டிற்கு முன்னால் கொட்டில் ஒன்றை அமைப்பதற்காக நிலத்தை தோண்டியுள்ளார். அதன்போது நிலத்தினுள் மிதிவெடிகள் இருப்பதை அவதானித்ததைத் தொடர்ந்து இராணுவத்தினர்க்கு இதுகுறித்து தெரியப்படுத்தியுள்ளார்.

அதன்பின்னர் குறித்த பகுதிக்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் இருந்து ஐம்பதுவரையிலான மிதிவெடிகளை மீட்டு செயலிழக்க செய்துள்ளனர்.

இதேவேளை யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்களை எட்டியுள்ள நிலையிலும் யுத்த வெடிபொருட்கள் அவ்வப்போது ஆங்காங்கே மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Allgemein தாயகச்செய்திகள்