இலங்கைக்கு அடுத்தடுத்து வரும் பெற்றோல் கப்பல்கள் – கோபத்தில் ரணில்

இலங்கைக்கு இன்றைய தினம் வரவுள்ள எரிபொருள் கப்பலுக்கு மேலதிகமாக எதிர்வரும் நாளை மேலுமொரு எரிபொருள் கப்பல் இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து குறித்த எரிபொருள் கப்பல் வரவுள்ளதாக பிரதமர் நாடாளுமன்றில் நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டினுள் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டால் கோபம் அடைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ் விடயம் தொடர்பில் ஆராய்ந்து விளக்கமளிக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு திடீரென பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை சிக்கலை ஏற்படுத்தும் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அரசாங்கம் இந்த நிலைக்கு பொறுப்பு கூறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Allgemein