விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கிக் கப்பலை ஆய்வு செய்த பெண் ஊடகவியலாளர்!!

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் முல்லைத்தீவில் இராணுவத்தினர் காட்சிப்படுத்தி வைத்துள்ள விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை ஆய்வு செய்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவான நீர்மூழ்கி கப்பல்களை புதுமாத்தளன் பகுதியில் இராணுவத்தினர் காட்சிப்படுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளிட்ட போர்த்தளபாடங்களை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் குறித்த காட்சியகத்திற்கு தினமும் வருகை தந்த வண்ணமுள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற சர்வதேச பெண் ஊடகவியலாளர் ஒருவர் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல் ஒன்றிற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Allgemein தாயகச்செய்திகள்