ஒன்று படுங்கள் ஈழத்தமிழர்களே.!பாகம்(10)

கருத்துசுதந்திரம், மொழிச்சுதந்திரம், மதச்சுதந்திரம், பரப்புரைசுதந்திரம், பண்பாட்டுச்சுதந்திரம் , மதித்தாளும் சுதந்திரம், மக்கள்சுதந்திரம், இல்லாத  சிங்கள அரசுகளைநம்பி எட்டாண்டு பட்டாடைபோத்திவாழ்ந்துவிட்டு சுற்றாடல் அரசியலாய் புது ஆடைகட்ட புறப்படும் உமது ஈழ அரசியலும் மக்களின் ஆர்ப்பாட்டங்களும்,

விட்டுச்சென்ற காணிகளை விட்டுக்கொடுக்காத அரசு விடிந்திடசுதந்திரம் தரும் என்று எண்ணுவது எமது தவறு என்று எமது அரசில்வாதிகள் புரிந்துகொள்ளவில்லை..ஆனாலும் புதிய அரசில்யாப்பில் இருந்த விடையங்களை விட்டுக்கொடுக்க எண்ணும் அரசியல்வாதிகள் எம்மின அரசியல்வாதிகள்,

பொதுவாக சுதந்திரன் கருத்து இங்கே எமக்குசுதந்திரம் இல்லாத கருத்தாகிறது தான் வழக்கறிஞராக இருந்து அரசின் செயல்பாட்டை பற்றி பார்பதாக அவர் தகவலை பார்த்துக்கொண்டால் முதலில் அவர் தமிழன், அதன்பின்தான் அவர் வழக்கறிஞர் என்பதை மறந்துவிட்டார்போலும்,

எமது துயர்தில் பங்கெடுக்காத எந்த அரசியல்வாதிகளும் எமது மக்களின் சுதந்திரத்துக்காக போராடமாட்டார்கள் எந்தனை எத்தனை ஆயிரம்வீரர்களையும்,மக்களையும்  இழந்து நிற்கும் எமக்கு எம்மினதுயர்களை துடைக்காத சிங்கள அரசின் செயல்பாட்டில் நம்பிக்கைவர சிங்கள அரசு என்ன செய்தது..?

எம் இனம்காக்க போரடிய விடுதலைப்புலிகளை நம்பவைத்து பலநாடுகள் இணைந்து  குண்டுகளை விதைத்து பிணக்குவியலை முல்லியில் உருவாங்கி எம்மினந்தை புலம்பி அழவைத்த பிணம்தின்னி கூட்டுமா எமக்கான சுதந்திரம்தரும் என்று நம்பியுள்ளீர்

எம்மினத்தை முள்ளியில் கொள்யிட முடியாமல் அழித்தஇனம் எம்மை எப்போதுகொள்ளியிடும் என்று பார்க்கலாமேதவிர நமக்கு என்றும் சுதந்திரம்தரப்போவதில்லை

எம்மினத்தைக்காக்க எமது உருமைக்காக தியாகத்தோடு போராடும் போராளியாக அரசில்வாதிவேண்டும் என்பதை எமது மக்கள் புரிந்து நிற்கின்ற இந்தவேளையில் எமதுதுயர்கலந்த மாவீரர்களுக்கு மக்களாக நாம் என்னசெய்யப்போகிறோம் என்பதை மக்கள்முடிவெடுத்துவிட்டார்கள் அரசியல்வாதிகள் விழித்தெழுவீர்களா..?

Allgemein தாயகச்செய்திகள்