லண்டனில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக மோதிய கார்: பலர் படுகாயம்

லண்டனில் நடைபாதையில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது கார் ஒன்று பயங்கரமாக மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள Covent Garden பகுதியில் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணி அளவில் நடைபாதையில் பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று Black cab கார் ஒன்று அங்கிருந்த மக்கள் மீது மோதியதால், பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.