கனடிய நெடுஞ்சாலை, “ஆக்க அழிவு சக்திகளிற்குரிய இறுதிப் போராட்ட களம்”

கனடிய நெடுஞ்சாலை 400ல் கவுன்ரி வீதி நெடுஞ்சாலை 88மற்றும் நெடுஞ்சாலை 89ல் இடம்பெற்ற பயங்கரமான வாகன விபத்தில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஒன்ராறியோ மாகாண பொலிசார் எச்சரித்துள்ளனர். அக்கினி சுவாலை நிறைந்த இந்த விபத்து ஆக்க அழிவு சக்திகளிற்குரிய இறுதிப் போராட்ட களம் போன்று காட்சியளிக்கின்றதென வர்ணிக்கப்பட்டுள்ளது.

இந்த கோர விபத்து செவ்வாய்கிழமை இரவு 11.30மணிக்கு நெடுஞ்சாலை 400- பிராட்வோட் ஒன்ராறியோவிற்கு அருகில் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

14-வாகனங்கள் மோதலில் இடம்பெற்றுள்ளன.

ஐந்து டிரக்குகள்-குறைந்தது இரண்டு எரிபொருள் டாங்கர்கள் உட்பட்ட-மோதியுள்ளதாக பொலிஸ் அதிகாரி கெரி சிமித் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த பகுதியில் பாரிய தீப்பந்தங்கள் மற்றும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் அழிக்கப்பட்டு சிதறல்கள் மட்டும் மிஞ்சியுள்ளதாகவும் வேறெதும் மிஞ்சவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

முறுக்கப்பட்ட போக்குவரத்து லாரிகளும் அழிக்கப்பட்ட வாகனங்கள் உதிரிப்பாகங்கள் மற்றும் இவை வாகனங்கள் தானா என அறிந்து கொள்ள முடியாத பொருட்கள் வீதிகளில்காணப்படுவதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நம்ப முடியாத ஒரு காட்சியாக தென்படுகின்றதெனவும் தெரிவித்தார்.

அண்மைக்கால விபத்துக்கள் போன்று இதுவும் சாரதிகளின் கவனக்குறைவினால் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. இதனை அடிப்படையாக கொண்டே விசாரனைகள் இடம்பெறும் என சிமித் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து லாரி ஒன்று மற்றொரு டிரக்கின்-வாகனங்கள் ஏற்றி வந்த லாரி- பின் பக்கத்தில் மோதியதால் சங்கிலி தொடர் மோதல் ஏற்பட்டதென சாட்சியம் ஒன்று தெரிவித்துள்ளது.

வாகனங்கள் ஏற்றி வந்த லாரியின் மேல் போக்கு வரத்து லாரி உருண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் லாரிகள் இரண்டும் தீயினால் அழிக்கப்பட்டுவிட்டது. நெடுஞ்சாலை பூராகவும் தீ பரவத்தொடங்கியது. இதனால் மற்றய வாகனங்களும் கொளுத்தப்பட்டன. எரிவாயு டிரெயிலர்கள் பிளந்ததால் நெடுஞ்சாலை பூராகவும் தீ பரவி நெடுஞ்சாலை 400 நெடுஞ்சாலை 9வரை மூடப்பட்டது. மக்கள் ஓடத் தொடங்கினர்.நெடுஞ்சாலையிலிருந்து பள்ளத்தை நோக்கி தீ பரவத் தொடங்கியுள்ளது

Allgemein உலகச்செய்திகள்