முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினருக்கு வாழும்வரை சிறை

தெஹிவளை பொலிஸ் நிலைய புலானய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய சுனில் தாபரை, சுட்டுக்கொலைச் செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு, வாழும்வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்கவே, மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

முல்லைத்தீவைச் சேர்ந்த செல்வத்துரை கிருபாகரன் என்வருக்கே, இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அத்தண்டனைக்கு மேலதிகமாக ஐந்து வருடகால சிறைத்தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்ததே, அவர் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டார்.

Allgemein