பச்சிளம் குழந்தை உயிரிழந்த பரிதாபம்

பெற்றோரின் கவனக்குறைவு: பச்சிளம் குழந்தை உயிரிழந்த பரிதாபம்,சுவிட்சர்லாந்தில் பச்சிளம் குழந்தை ஒன்று காரில் மூச்சுத்திணறி இறந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் நியூசேடல் (Neuchatel) மாகாணத்தில் 16 மாத குழந்தை ஒன்று பல மணி நேரம் காரில் இருந்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குழந்தையை காப்பகத்தில் விட மறந்து விட்டு பெற்றோர் அலுவலகத்துக்கு சென்றுள்ளனர்.

இதனை அடுத்து காரில் வெப்பம் மிகுந்த சூழலில் இருந்ததால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளது.

பெற்றோர் அலுவலகம் முடிந்த பின் வந்து பார்த்த போது குழந்தை இறந்துள்ளதால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது பெற்றோர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்க

Allgemein உலகச்செய்திகள்