கோப்பாயில் ஆணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பாலத்தடியில் ஆணொருவரின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டராவார்.குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சரிந்த நிலையில் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Allgemein தாயகச்செய்திகள்