முன்னாள் போராளிகளின் பெயரில் புதியதொரு கட்சி ஆரம்பம்!

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் சார்பில் புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய ஜனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில், இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், நேற்றுக்காலை இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இதில் முன்னாள் போராளிகள், அவர்களின் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.

 

Tamil National Democratic Cadres Party (3)

முன்னாள் போராளிகளினால் ஏற்கனவே, ஜனநாயகப் போராளிகள் கட்சி என்ற பெயரில் கட்சி ஒன்று நடத்தப்பட்டு வரும் நிலையில் மற்றொரு புதிய கட்சி முன்னாள் போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், இந்தப் புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Allgemein தாயகச்செய்திகள்