தந்தையை வீதியில் விட்டுச் சென்ற புதல்வர்கள்!! அபயக் கரம் நீட்டிய பொலிஸார்!!

அனுராதபுரத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் முதியவர் ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.இரவு வேளையில் யாரோ ஒருவர் முதியவரை வீதியில் விட்டுச் சென்றுள்ளதாக அனுராதபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள், வயதான நபரை மீட்டுள்ளனர்.

குறித்த நபருக்கு தேவையான உணவு வழங்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸ் அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

எனினும் குறித்த வயோதபர் 76 வயதுடையவர் எனவும், வெலிகம, கப்பரதொட்ட பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸ் அதிகாரி கண்டுபிடித்துள்ளனர்.

அந்த இடத்திற்கு தான் எவ்வாறு வந்தேன் என்பது தனக்கு நினைவில்லை என வயோதிப தந்தை குறிப்பிட்டுள்ளார்.முதியவர் தெருவில் கிடந்த போதும், அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க எவரும் விரும்பவில்லை என குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

பிள்ளைகளினால் வீதியில் பெற்றோரை விட்டு செல்லும் யுகத்தில், பொலிஸ் அதிகாரியின் மனிதாபிமான செயல் பலராலும் பாராட்டப்படுகின்றது

Allgemein