யாழ்ப்பாணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை

யாழ்ப்பாணம் அரியாலை ஏ.வி ஒழுங்கையில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தனது நண்பர் கொடுத்த கடனை திருப்பி தராத காரணத்தால்  கடந்த  இரண்டு மாதங்களுக்கு முன்னா் கணவர் தற்காலை செய்துகொண்டார்.

இந்நிலையில் இன்று அவரது குடும்பத்தில் உள்ள ஏனைய நால்வரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஐஸ்கிறீமிற்குள் நஞ்சுமருந்தை கலந்துசாப்பிட்டே தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

குறித்த சம்பவத்தில் சுநேத்திரா(குடும்பத்தலைவி) கர்சா, சஜித், சரவணா ஆகியோரே தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.