கிளிநொச்சியில் தொடர்ச்சியாக மீட்கப்படும் வெடிபொருட்கள்

கிளிநொச்சி வட்டக்கச்சி புழுதியாறு குளத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி வட்டகச்சி புழுதியாறு குளத்தில் விடுதலைப்புலிகள் யுத்த காலத்தில் அனுராதபுரம் விமான நிலைய தாக்குதலுக்கு ஒத்திகை பாா்த்த விமான ஓடுபாதைகள் உள்ள இடத்தில் இவ் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது ஐ.பி.சி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது 60 MM  10 மோட்டார் செல்கள், 81 MM 01 மோட்டார் செல் நேற்று இரவு விசேட அதிரடி படையால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரணைமடு விமான படையினரால் இராமநாதபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு நீதிமன்ற அனுமதி பெற்று விசேட அதிரடிப்படையால் இவ் வெடிபொருட்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Allgemein