யாழில் மீண்டும் தமிழீழ தேசிய மாவீரர்நாள் நிகழ்வுகள்!

யாழ்.குடாநாட்டினில் படையினர் வசமிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்கள் முன்பதாக மாவீரர் நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்திலுள்ள கோப்பாய்,கொடிகாமம் வடமராட்சியின் எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லங்கள் தற்போது அரச படைகள் வசமேயுள்ளது. இம்மாவீரர் துயிலுமில்லங்கள் 1995ம் ஆண்டு படையினரால் யாழ்.குடாநாடு கைப்பற்றப்பட்ட போது இடித்தழிக்கப்பட்டன.எனினும் 2002 ஆண்டு ஏற்பட்ட சமாதான சூழலினில் மீண்டும் அவை கட்டியெழுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையினில் 2006ம் ஆண்டுமு மீண்டும் மோதல்கள் மூண்டபொழுது அவை இடித்தழிக்கப்பட்டு 2009ம் ஆண்டின் பின்னராக படை முகாம்களாக்கப்பட்டிருந்தன.அப்பகுதிகளினுள் பொதுமக்கள் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையினில் கடந்த ஆண்டினில் வன்னியிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் நினைவேந்தல் அஞ்சலிகள் நடந்த போதும் யாழ்ப்பாணத்தினில் ஏதும் நடந்திருக்கவில்லை.
இந்நிலையினில் இம்முறை யாழ்ப்பாண மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தல்கள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முழங்காவில் துயிலுமில்லத்தை புனரமைப்புச் செய்வதற்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் 20 இலட்சம் ரூபா வழங்கியுள்ளார்.புலம்பெயர் தமிழ் மக்களால் திரட்டி வழங்கப்பட்ட நிதியே துயிலுமில்ல வளாகத்தின் சுற்று மதில் அமைப்பதற்காக வழங்கப்பட்டு அதனது ஆரம்ப கட்ட வேலைகள் இடம்பெறுகின்றது.
கடந்த 17ஆம் நாள் இதற்கான அத்திவாரக் கற்கள் நடப்பட்டு தற்போது கட்டும் வேலைகள் மிகவும் வேகமாக இடம்பெற்று வருகின்றது.
இதன் கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் மாவீரர் நாளுக்கிடையில் நிறைவு பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Allgemein மாவீர்வீரவணக்க நாள்