கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் உள்ள வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருநாள் திருப்பலி உற்சவம்

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் உள்ள புனித வேளாங்கண்ணி மாதா கோவில் வருடாந்தத் திருநாள் திருப்பலி உற்சவம் இன்று 25.10.2017 காலை இடம்பெற்றது.
.
திருநாள் திருப்பலியை புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகளார் ஒப்புக்கொடுத்தார். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்பணி பேர்ணாட் அடிகளார், கோப்பாய் பங்குத் தந்தை அருட்பணி அன்ரன் மத்தாயஸ் அடிகளார் ஆகியோரும் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.
.
நிகழ்வின் நிறைவில் குருத்துவப் பணியில் 32 ஆண்டுகளாகவும் கல்விப் பணியில் 27 அண்டுகளாகவும் சேவை நல்கும் புனிதபத்திரியார்கல்லூரி அதிபர் கலாசாலை சமூகத்தின் சார்பில் கௌரவிக்கப்பட்டார்.
.
நிகழ்வை கிறிஸ்தவ மாணவர் மன்றத்தினர் காப்பாளர் ஜெ. பாலகுமாரின் வழிப்படுத்தலில் முன்னெடுத்திருந்தனர்.

Allgemein தாயகச்செய்திகள்