மேல் மாகாண சபை உறுப்பினர் உட்பட 7 பேர், மற்றும் மனைவி விளக்கமறியலில் !

கம்பஹா- திவுலபிடிய பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரன்டீர் ரோத்ரிகோவின் மனைவியை 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட ரன்டீர் ரோத்ரிகோ உள்ளிட்ட எழுபேரை வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மினுவன்கொட  நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய போதே நீதவான் ரக்சித பண்டனாகார இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

நேற்று பகல் திவுலப்பிட்டிய பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குழுவொன்றுக்கும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதன்போது ரன்டீர் ரோத்ரிகோ உள்ளிட்ட எழுபேர் கைதுசெய்யப்பட்டனர்.

அத்தோடு அவர் வீட்டில் இருந்துகுண்டு துளைக்காத கவசசட்டை  உள்ளிட்ட  பொருட்கள் மற்றும் ரவைகள் 115 மீட்கப்பட்டிருந்ததோடு ரன்டீர் ரோத்ரிகோவின் மனைவியும் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த பெண் இந்திய நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.