கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 பேர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்ததாக கூறப்படும் 40 பேரை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்லைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது 40 பேருக்கும் தலா 1500 வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Allgemein