வெளிநாடுகளுக்குச் செல்லவிருக்கும் இலங்கையர்களுக்கு நேரவுள்ள இடர்பாடு!

வெளி நாடுகளில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ளவர்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் இனிமேல் பெறுப்பேற்காது என தகவல் கிடைத்துள்ளது. வேலை வாய்ப்புக்களுக்கு சென்று தவணைக்காலம் முடிந்து சட்டவிரோதமான முறையில் தொடர்ந்தும் தங்கியிருப்பவர்கள் தொடர்பாகவே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது,

பதினைந்து இலட்சம் பேர் மத்தியகிழக்கு உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இவ்வாறான முறையில் தங்கியுள்ளனர். அதன்படி தென் கொரியா, சைப்ரஸ், இஸ்ரேல் , மலேசியா, ஹெங்கொங் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலேயே இவ்வாறு சட்டத்துக்குப் புறம்பான நிலையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தகவலினை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளதோடு இவ்வாறான நபர்களினால் நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கருத்துத் தெரிவிக்கும்போது, இலங்கைக்கு தென் கொரியாவினால் வழங்கப்படுகின்ற வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் குறைவடைந்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தென்கொரியாவிற்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் 25,000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் சென்றுள்ளனர் என்றும், அவர்களில் 5000 பேர் வரை சட்டவிரோதமான முறையில் அங்கு தங்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இவ்வாறான நிலைமை தொடர்ந்துகொண்டிருப்பதனால் இனிவரும் காலத்தில் வேலை வாய்ப்புத்தேடிச் செல்வோர் பெரும் அசௌகரியங்களினைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Allgemein