தனக்­குள் இருக்­கும் பேயையே மைத்­தி­ரி­ குறிப்­பிட்­டா­ராம்!- மகிந்த

கடந்த வாரம் யாழ்ப்­பா­ணத்­தில் பேசிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தனக்­குள் இருக்­கும் பேயைக் குறிப்­பிட்­டாரே தவிர, தன்­னைப் பேய் என்று குறிப்­பி­ட­வில்லை என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச.

‘‘மாவ யக்கா அவு­சன்­னேப்பா’ என்ற சிங்­கள வச­ன­மா­னது கோபத்­தின் வெளிப்­பா­டா­கும். எனக்­குள் இருக்­கும் பேயை வெளியே கொண்டு வர­வேண்­டாம் என்­பதே அதன் அர்த்­த­மா­கும். யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் இதைத்­தான் சொல்­லி­யி­ருந்­தார். அவர் என்­னைக் குறி­வைத்­துத்­தான் பேசி­னார் என்று நீங்­கள் தவ­றாக எடை­போ­ட­வேண்­டாம்’’ என்றார் மகிந்த.

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற தேசிய தமிழ் மொழித் தின விழா­வில் உரை­யாற்­றிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தன்­னைப் பல­வீ­னப்­ப­டுத்­தி­னால் பேய்­கள்­ தான் சக்தி பெறும் என்று கூறி­யி­ருந்­தார்.

2015 அரச தலை­வர் தேர்­த­லுக்­கான பரப்­பு­ரை­யின்­போது யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து அப்­போ­தைய ஆட்­சி­யா­ளர் மகிந்த ராஜ­பக்ச தெரி­யாத தேவ­தை­யை­விட தெரிந்த பிசாசு எவ்­வ­ளவோ மேல் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

மைத்­தி­ரி­யின் பேச்சு அதற்­கான பதில் என்று அர­சி­யல் அவ­தா­னி­கள் குறிப்­பிட்­டி­ருந்­த­னர்.
இது தொடர்­பில் மகிந்த ராஜ­பக்­ச­வி­டம் கேட்­கப்­பட்­டது.

‘‘இந்த அரசு கிட்­டத்­தட்ட பாம்பு செத்த பாம்­பாட்­டி­யின் நிலை­யில்­தான் இருக்­கி­றது. மக்­க­ளின் ஆத­ரவு இவர்­க­ளுக்கு இல்லை. அரச தலை­வ­ருக்கு வாக்­க­ளித்த தமிழ் மக்­களே அவரை வெறுக்­கின்­ற­னர். அவர் பேய் என்று என்­னைச் சொல்­ல­வில்லை. நாங்­கள் கோபப்­ப­டும்­போது நமக்­குள் இருக்­கும் பேயை வெளியே கொண்டு வர­வேண்­டாம் என்­ப­தற்­காக ‘மாவ யக்கா அவு­சன்­னேப்பா’ என்று சிங்­க­ளத்­தில் சொல்­வோம். அத­னைத்­தான் மைத்­திரி சொல்­லி­யுள்­ளார். அது­தான் உண்மை. நன்­றாக யோசித்­துப் பாருங்­கள். புரி­யும். இப்­போது தேர்­தல்­களை ஒத்­தி­வைப்­பது யார்? பேயின் அவ­தா­ரங்­களா?’’ – என்­றார்.

Allgemein