சுவிட்சர்லாந்து மணமகளை திருமணம் செய்யவிருந்தவர் வாகன விபத்தில் உயிரிழந்தார்

இலங்கையின் தென்பகுதியான பேருவளையில் உயிரிழந்த இளைஞனின் உடற்பாகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

வாகன விபத்தில் உயிரிழந்த 26 வயதுடைய இளைஞனின் கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகிய உடற் பாகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த இளைஞர் அடுத்த மாதம் சுவிஸ்ட்சர்லாந்து பெண்ணுடன் திருமண பந்தத்தில் இணைய ஆயத்தமாகியுள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் திகதி இரவு அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

பேருவளை, மொரகல்ல பகுதியை சேர்ந்த சுரேஷ் அபேகுணவர்தன என்ற இளைஞன் வாகன விபத்துக்குள்ளான நிலையில் அவர் மூளைச் சாவடைந்துள்ளார்.

இதனால் அவரது உடற்பாகங்கள் தானம் செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற மரண விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் தந்தை வாக்குமூலம் வழங்கிய போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

‘உயிரிழந்தவர் எனது மகன். எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்மார்கள் உள்ளனர். உயிரிழந்த மகன் மொரகல்லவில பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கான விடுதியை நடத்தினார்.

17ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் நான் உறங்கி கொண்டிருந்த போதுஇ மனைவி மற்றும் கடைசி மகன் சத்தமாக மூத்த மகன் விபத்துக்குள்ளாகியதாக கூறினர்.

மகனை பார்க்க சென்ற போது அவர் மூளைச் சாவடைந்துள்ளதாகவும், அவர் உயிர் பிழைக்க முடியாதெனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவரது உடற்பாகங்களை தானம் வழங்க விருப்பம் என கூறினோம்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Allgemein