வெற்றிபெற்ற சாவகச்சேரி இந்துவின் மாணவர்க

கொழும்பு தியகம மைதானத்தில் இடம்பெற்ற அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களைப் பெற்று சாதனைபடைத்துள்ளனர்.
இன்று காலை 8:00 மணியளவில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி சமூகத்தினரால் டிறிபேக்கல்லூரியின் மேலைத்தேய வாத்தியம் முழங்க கௌரவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கான பாராட்டுவிழா இந்துக்கல்லூரியில் அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் தென்மராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ் சுந்தரசிவம் கல்லூரியின் பழைய அதிபர்கள் அயல்பாடசாலை அதிபர்கள் ஆசியர்கள் பழையமாணவர் சங்க உறுப்புக்கள் மாணவர்கள் பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்.

மேலதிக விபரங்கள் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

Allgemein தாயகச்செய்திகள்