மைத்திரியின் கருத்திற்கு சம்பந்தன் கொடுத்த பதிலடி!

தெற்கில் பேய் வரும், பிசாசு வரும் என்பதற்காக தமிழர்கள் தொடர்ந்தும் அவலங்களை எதிர்கொண்டபடி வாழ முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழர்களின் துயரங்களுக்கான தீர்வு விரைவில் வழங்கப்பட வேண்டும். இனியும் அவர்களால் காவல் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

என்னை பலவீனப்படுத்தினால் உண்மையில் பலம் பெறப்போவது பேய்தான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்.

தாம் படும் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே தமிழ் மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். எனவே அவர்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும்.

தெற்கில் பேய் வரும் பிசாசு வரும் என்பதற்காகத் தமிழர்கள் தொடர்ந்தும் அவலங்களை எதிர்கொண்டபடி வாழமுடியாது. விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

Allgemein