மன்னாரில் குண்டுவெடிப்பு – காவல்துறை அதிகாரி காயம்

மன்னாரில் நேற்று கிளைமோர் குண்டு ஒன்று வெடித்ததில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். வீடு ஒன்றில் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டபோது குறித்த கிளைமோர் வெடித்துள்ளதாக மன்னார் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

வீதியில் சென்றுகொண்டிருந்தபோதே வெடிப்பு சம்பவத்தால் காவல்துறை அதிகாரி காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.