ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர் இருவரின் பதவிகளை பறித்த மைத்திரி!

நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

குமார வெல்கம மத்துகம அமைப்பாளராகவும், மஹிந்தானந்த நாவலப்பிட்டி அமைப்பாளராகவும் செயற்பட்டு வந்தனர்.

இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அத்தனகல தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த முடிவுகள் நேற்று மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டத்தின் போது ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்டன.

Allgemein