3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சண்முகநாதன் ஜெயகுமார்
(ஜெயா, பரீஸ் ஈழநிலா இசைக்குழு பிரபல பாடகர்)
அன்னை மடியில் : 21 யூன் 1970 — ஆண்டவன் அடியில் : 17 ஒக்ரோபர் 2014

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் ஜெயகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

நம்ப முடியவில்லை உடன்பிறப்பே உன் இறப்பை..!

அகிலத்தை ஆழ்கிறது வலயம்
இன்னுமோர் கண்டத்தில் வைத்தியன்
நேருக்கு நேர் பார்க்காமல் சிகிச்சை
எல்லாமே சாத்தியம் இன்று!

என்னருமைச் சகோதரனே!
அனைத்தும் உனதருகில் இருந்தும்
முடியாமல் போனது எப்படி!
விதியா? இறைவனின் சதியா?

கண்மூடி தலையணையில்
சரியாக தூங்கவில்லை இன்றுவரை
குற்றவுணர்ச்சியில் குறுகித்தான் போகின்றேன்!

அருகருகே இருந்திருந்தால்
அடைகாத்து இருப்பேனே!
அம்மா கேட்கின்றாள்? மெளனமொழியாலே!
செய்வதறியாது சிலையாகி போகின்றேன் சிலநிமிடம்!

அண்ணன் என்றால் அதி பாசம் தான் உனக்கு..
உனதருமையை உணர மறந்தேனா?
கண்ணிமைக்கும் நேரமதில்
காலனவன் கவர்ந்து சென்றதேனோ?

காரணம் தேடிக் கடைக்கோடி தெய்வம் வரை
கால்கடுக்க நடந்துரைத்தேன்!
காலமும் கனவுகளும் கரைந்தோடிச் செல்கின்றது
விடைதருவார் யாருமில்லை!

தாய்முகத்தை பார்க்கையில்
பாவியாகி நிற்கின்றேன்
உனையிழந்த வெற்றிடத்தை
கண்ணீரால் நிரப்புகின்றாள் வேறுவழி தெரியாமல்!

பார் போற்றும் பாடகனாய் நீயிருந்தும்
தம்பி தானே பாடுகின்றான் என் அலட்சிய போக்கால்
உன் இலட்சியத்தை உணரமறந்தேனா?
பாவலனே பார்போற்றும் இன்னிசை இளவலே
பல்லவி தொடங்குகின்றாய் என்றிருந்தோம்,
நீயோ மூகாரிபாடி முடித்து விட்டாய் வாழ்வை
நாமோ மூர்ச்சையாகிப் போய்விட்டோம்!

என்னுடன் பிறந்த மாசற்ற பாசமே
நீ வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம் கண்டேன்
வானுயர்ந்து நிற்கின்றாய் பலர் போற்ற வாழ்ந்ததினால்

தாரம் என்று வந்தவளோ
தலைவிதியை நோகின்றாள்
உன் பெயர் சொல்லும் துளிர்கள்
இன்று தளிர்களாகி விருட்சமாகும்
நாளை அதில் உன்வதனம் நிழலாடும்!!!

என்றென்றும் உன் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டி நிற்கின்றோம்!
எந் நாளும் நினைவேந்தி போற்றிடுவோம் உன் நாமம் வாழி
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !

என்றென்றும் உன்னுடைய நினைவுகளுடன் அம்மா, மாமி, மனைவி,
பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.
தகவல்
சண்.சசிகுமார்(அண்ணன்)
தொடர்புகளுக்கு
சண்.சசிகுமார்(அண்ணன்) — கனடா
செல்லிடப்பேசி: +14167095000