நம்பலாமா இவர்களை ஒன்று படுங்கள் ஈழத்தமிழர்களே.!பாகம்(8)

நாம் நமது என்று இருக்கும் இவர்கள் நாங்கள் எங்களது என்று எப்போதும் இருக்கமாட்டார்கள் விடுதலைக்காலத்தில் வீரர்செய்த தீயாகம் மறந்தாரா…? அல்லது வீழ்த்தி சூழ்ச்சி செய்த சிங்கள அரசுகளை மறந்தார..?

கூட்டணி அமைத்து வைத்த விடுதலைப்புலிகளின் தலைவர் தன்னை அப்படி கூட்டணியில் இணைக்கவில்லை என்று சொல்லும் சம்மந்தர்
தமிழ் இனத்துக்கு சம்மந்தமில்லாதது போல் கதைக்கிறார் புலிகள் இல்லாவிட்டால் இவருக்கு ஏது இன்றய இந்த நிலை..?

மேடைகளில் நின்று விடுதலைக்காக குரல்கொடுத்த ஐயா செனாதி என்ன ஆனார்..? ஏன்தான் உங்கள் நிலை மாறியுள்ளது ..?

அரசியில் இறங்கி விட்டாலே மக்ககள் அழிவை மறந்து மமதைவந்துவிடுகிறதா..?

அல்லது தம்மை இலட்டாதிபதிகள் ஆக்கத்தான் நினைவு வந்து விடுகிறதா..?

வீட்டுக்காக வாழாது நாட்டுக்காக வாழ்ந்த விடுதலை வீரர்களுடன் நீங்களும் பளகியவர்கள்தானே,

அவர்கள் தியாகத்தில் நீங்கள் தென்னிலங்கையர்களுடன் என்ன செய்கிறீர்கள் .?

அல்லது ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்தீர்கள் என்பதை என்னிப்பாருங்கள்..? மக்கள் அனுப்வைத்தது தங்களுக்காக ஞாயம் கேட்பீர்கள் என்று நீங்கள் அவர்கள் கண்ணீரில் இருக்க நீங்கள் பன்னீர் பூசிவாழுகிறீர்கள்

இறந்த பிணங்களில் இறுதி அழிவில் வழி தெரியாமல் வந்து ஒதுங்கிய துயரத்தை நினைத்து கலங்கி நிற்காமல் தமக்காக தமிழினத் தலைவர்களாய் உங்களை அனுப்பிவைக்க கண்களை மூடிய பூணையாய் உங்கள் நிலை இருக்கிறது,

இனி என்றாலும் நீங்கள்திருந்தி எம்மினத்தின் விடிவுக்காய் குரல் கொடுக்காவிடில்  படத்து போஸ் குடுப்பும், பன்னீர்வாழ்வதுவும் பாளாகப்போய்விடும்,

காலம் என்பது கடைமை என்பதும் என்ன,,? என்பதை உணராதவர்களாக இருக்காமல் சம்மந்தர் சம்மந்தப்பட்ட சுமந்திரன் சேனைகளின் பதி ஆகியோர் உங்களை மாற்றாத பட்சத்தில் மக்கள் உங்களை மாற்றுவார்கள் என்பதை உணரும்காலம் வெகுதுாரம் இல்லை ஒன்று படுங்கள் தமிர்களே
நன்று வாழ

பாம் 9தொடரும் ஈழத்தமிழதமிழன்

Allgemein தாயகச்செய்திகள்