மஹிந்த ராஜபக்சவுக்கு ஜப்பானில் ஏற்பட்ட அவமானம்; பின்னணியில் மைத்திரி?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மிகப்பெரிய அவமானமொன்று ஜப்பானில் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்த மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோரும் சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில் அவர்களை வரவேற்பதற்குரிய நடவடிக்கைகள் ஜப்பானிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

ஸ்ரீலங்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு அரசியலில் மூத்த தலைவர்கள் செல்லும்போது அங்கிருக்கும் தூதரகத்தினால் வரவேற்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழமை.

ஆனால் இம்முறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த குழுவினருக்கான வரவேற்புக்களை மேற்கொள்ள வேண்டாமென ஜப்பானிலுள்ள தூதரக அதிகாரிகளுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு அளிக்கப்பட்டிருப்பதாக பதிலளிக்கப்பட்டிருக்கிறது.

Allgemein