பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய முன்னாள் ஈரோஸ் குழு உறுப்பினர் ,

வவுனியாவை எடுத்துக்கொண்டால் பல ஊடகங்கள் குந்திரமாக செயல்படுகின்றன. அப்படியிருக்கையில் இணையத்தை நடத்துவதாக குருமன்காட்டில் அலுவலகத்தை திறந்து பந்தா பண்ணிக்கொண்டிருந்த முன்னாள் ஈரோஸ் குழு உறுப்பினர் ஜனகன் பல லட்சம் ரூபா பணத்தை சுருட்டிக்கொண்டு யாருமே பார்க்காத குறிப்பிட்ட இணையத்தின் அலுவலகத்தை இரவோடிரவாக பொருட்களை ஏற்றிக்கொண்டு ஓடிவிட்ட சம்பவமானது வவுனியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலே குறிப்பிட்ட இவன் மடுப்பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டிதருகிறேன் என மக்களிடம் காசு வசூலித்து அப்பணத்துடன் வவுனியாவிற்கு ஓடி வந்தவன் அதன்பின் ஈரோஸ் அமைப்பில் இருந்துகொண்டு பல பித்தலாட்டங்களை செய்தபின் அங்கிருந்து சிறிரெலோ அமைப்பில் இணைந்துகொண்டு தன்னை சிறிரெலோவின் விசுவாசியாக காட்ட முனைந்து இவனின் பருப்ப வேகாத நிலையில் தன்னை ஒரு நடுநிலை ஊடகவியலாளனாக காட்ட முயற்சித்தான்.
வெளிநாட்டிலுள்ள சில ஏமாளிகளை தன் வலையில் விழ வைத்து அவர்களிடமிருந்து பணத்தை கறந்து சில காலம் இணையத்தினை நடத்திய நிலையில் 10000 ரூபா காசு கொடுத்து மலையகத்தை சேர்ந்த சங்கம் ஒன்றிடமிருந்து ஊடகச் செம்மல் என்ற பட்டத்தையும் பெற்றுக்கொண்டிருந்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இவனின் இணையத்தினை மலையக மக்கள் பற்றிய எந்த செய்தியும் பதிவிடுவதில்லை என்பதுடன் மலையக மக்கள் பற்றி ஒரு கட்டுரைகூட இவன் வரைந்தது கிடையாது. எனினும் தனது இணையத்தினை பலர் பார்வையிடுவதாக காட்டிவந்திருந்தான்.
இணையத்தை வைத்து இவன் நடத்திய பித்தலாட்ட உதைபந்தாட்டப் போட்டி காரணமாக வவுனியா நீதிமன்றத்தில் இவன்மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயம் எனபதுடன் உதைபந்தாட்டப்போட்டி நடத்துவதாக கூறி விளையாட்டுக்கழகங்களிடம் பல லட்சம் ரூபாக்களை சுருட்டியுள்ளதுடன் குறிப்பிட்ட இணையத்திற்கு நிதியுதவி செய்த வெளிநாட்டு அமைப்புக்களிடமிருந்து நியூஸ்பேப்பர் வெளியிடப்போவதாக தெரிவித்து பல லட்சம் ரூபாக்களை சுருட்டிக்கொண்டு இரவோடிரவாக குருமன்காட்டிலிருந்த அலுவலகத்தை மூடி விட்டு ஒடீ விட்டதாகதெரியவருகிறது. இவனிடம் வேலை செய்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு கடந்த ஆறு மாதகாலமாக சம்பளம் வழங்கப்படவில்லை என அதுகள் புலம்பித்திரியுதுகள்.
அத்துடன் இவன் சுருட்டிய பல லட்சம் ரூபா பணத்தில் இரண்டு கார்களை விலைக்கு வாங்கி வாடகைக்கு கொடுத்து வருவதாகவும் வவுனியாவில் பந்தாவாக வாழ்க்கை நடத்தும் இவனுக்கு தற்போதும் எலக்சன் ஆசை வந்துவிட்டது என்பதும் அப்பட்டமாக வெளிவந்துவிட்டது.
Allgemein