வடக்கு மாகாணத்திற்கு உடனடியாக ஆயிரம் தமிழ் பொலிஸார் தேவை..!

யாக உள்ளதென வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தின் போதே இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வடகிழக்கில் தமிழ் பொலிஸார் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. விசேடமாக இம்முறை வடகிழக்கில் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்பவர்களுக்குரிய பயிற்சி வடகிழக்கிலேயே இடம்பெறவுள்ளது.

அவர்கள் பயிற்சிக்கு வெளியில் செல்லத் தேவையில்லை. எனவே, மிக விரைவாக துணிச்சலுடன் இளைஞர்கள் குறித்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

பொலிஸ் நிலையங்களில் இதற்கான விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படும். எதிர்வரும் ஜனவரி மாதம் ஆயிரம் தமிழ் பொலிஸார் தேவையாக உள்ளது.

பெண்கள் அதிகளவில் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மாதாந்த ஊதியமாக 55,000 ரூபா பெற்றுக்கொள்ள முடியும்.

எமது மக்களின் முன்னேற்றத்தை, தேவைகளை கருத்தில் கொண்டு விரைவாக பொலிஸ் சேவையில் இணையுங்கள் என கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Allgemein