ஸ்ரீலங்காவில் ஆணின் இதயம் மாற்றப்பட்ட பெண் திடீர் மரணம்; காரணம் வெளியானது!

ஸ்ரீலங்காவின் இரண்டாவது இதய மாற்றுச் சிகிச்சை பெற்ற யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கண்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெறுள்ளது.

ஸ்ரீலங்காவில் ஆணின் இதயம் மாற்றப்பட்ட பெண் திடீர் மரணம்; காரணம் வெளியானது!

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,

கடந்த மாதம் 27ஆம் திகதி கண்டி அழுத்கம களுவாமோதர பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான சச்சினி செவ்வந்தி என்ற யுவதிக்கு கண்டி போதனா வைத்தியசாலையில் இதயமாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

விபத்து ஒன்றினால் மூளைச்சாவடைந்த நளின் பண்டார என்ற இளைஞனின் இதயமே குறித்த யுவதிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனை வெற்றிகரமான சிகிச்சை என்று குறித்த மருத்துவக் குழுவும் அறிவித்திருந்தது.

இதய மாற்றம் நிறைவடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.

கண்டி போதனா வைத்தியசாலையில் முதலாவது இதயமாற்றுச் சிகிச்சை கடந்த ஜூலை மாதம் 7ஆம் நாள் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது. அந்த சிகிச்சையின்மூலம் இதயம் மாற்றப்பட்ட யுவதி ஆரோக்கியமாக உள்ளார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது இதயமாற்றுச் சத்திரசிகிச்சையாக கடந்த மாதம் 27ஆம் நாள் குறித்த யுவதிக்கு மேற்கொள்ளபட்டது.

குறித்த யுவதியின் உயிரிழப்பிற்கு காரணம் நுரையீரலில் ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தமென மரண அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Allgemein