பெண் பொலிசார் மர்மமான முறையில் கொலை: சடலம் பூங்காவில் மீட்பு

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் பொலிசார் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் அங்குள்ள பார்க் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Wilmslow பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய Leanne McKie என்ற பெண் பொலிசார் மான்செஸ்டர் பகுதியில் பணியாற்றி வந்துள்ளார்.

மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர், Cheshire பகுதியின் Macclesfield அருகே உள்ள Poynton பார்க்கில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் சந்தேகத்தின் பேரில் 43 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பொலிசார் கூறுகையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Allgemein உலகச்செய்திகள்