கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற வாணிவிழா

கொக்குவில் இந்துக் கல்லூரியின் வாணிவிழா இந்துமாமன்றத் தலைவர் க.ரகுராம் தலைமையில் கல்லூரி அதிபர் ம.ஞானசம்பந்தன் முன்னிலையில் 27.09.2017 காலை பஞ்சலிங்கம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சோ.சேனாதிராசாவும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசனும் கலந்து கொண்டனர்.

விசேட விருந்தினர்களாக இலண்டனில் இருந்து வருகை தந்த பழைய மாணவர் கருணாகரனும் கனடாவில் இருந்து வருகை தந்த பழைய மாணவர்களான ரகுதேவராஜா தம்பதியரும் பங்கேற்றனர்.
.
கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து வரவேற்பு ஊர்வலத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.
.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் பல மேடையேற்றப்பட்டன. மாணவர் பாராளுமன்றத்தினரால் பொன் மொழிகள் என்ற கையேடு வெளியிட்டு வைக்கப்பட்டது.

Allgemein தாயகச்செய்திகள்