புதியதேசமாக பிறக்கவிருக்கிறது குர்தீசுத்தான்.

மூன்று கோடிக்கும் குறைவான மக்கள்தொகையோடு நான்கு நாடுகளுக்கு (துருக்கி,சிரியா,ஈரான்,ஈராக்) நடுவில் விடுதலைப்போரை நிகழ்த்தி இன்று உலக அரங்கில் தனிநாடு கோரிக்கைக்கான பொதுவாக்கெடுப்புக்கு அழுத்தம் தந்து புதியதேசமாக பிறக்கவிருக்கிறது குர்தீசுத்தான்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் போலவே பெண்போராளிகளை நிறைத்து வைத்து சமராடிய போராளிகளாக குர்தீசியர்கள் புலப்படுகிறார்கள்.

விடுதலை வேட்கையோடு கண்களெல்லாம் தாயகக்கனவைச் சுமந்து மாவீர்களைக் கொடையாய்த் தந்து கட்டியெழுப்பிய நாட்டை துரோகத்தால் இழந்து நிற்கும் தேசிய இனத்தின் பிள்ளைகளுக்கு இந்தப் பூமிப்பந்தில் ஏதேனுமொரு தேசம் பிறந்தால் உண்டாகும் மகிழ்வின் அளவை அறுதியிட முடியாது. அதே மட்டில்லா மகிழ்வோடு பிறக்கவிருக்கிற புதிய குர்தீசுத்தானை நேசிக்கிறோம். 

சுற்றியுள்ள நாடுகளைப் போலல்லாமல் தனித்த வளங்கள் கொண்டிருக்கிற குர்தீசுத்தான் போரின் கோரத்திலிருந்து மீண்டு செழுமைபெற்று உலக அரங்கில் தன்னிகரற்ற தன்மையைப் பெற்று விளங்க தமிழ்த்தேசிய இனத்தின் மக்களாக வாழ்த்துகிறோம்.