சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற முத்திரை கண்காசி

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு சாவகச்சேரி அஞ்சல் தினைக்களத்தினர் முத்திரை கண்காசி ஒன்றினை சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையில் நடாத்தினர்.

இன்றைய தினம் நண்பகல் 12:00 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் சாவகச்சேரி அஞ்சல் அதிபர் லம்பேட் இன்பராஜ் மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையில் அதிபர் திருமதி எஸ்.கந்தசாமி ஆகியோர் இணைந்து கண்காசியை திறந்துவைத்தனர்.

நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு அஞ்சல் திணைக்களத்தின் சேவைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.