யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வடக்கு முதலமைச்சர்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வட மாகாண முதலமைச்சருக்கு இன்று சத்திர சிகிச்சை நடைபெற்றுள்ளதாக யாழ் போதன வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வட மாகாண முதலமைச்சரின் உடலில் முக்கிய இடத்தில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றுவதக்கு சத்திர சிகிச்சை நடைபெற்று தற்போது இருதய சிகிச்சை விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார்
சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வடக்கு முதலமைச்சர் விடுமுறை கோரியபோதும், யாழ்ப்பாணத்தில் தங்கி இருக்கின்ற காரணத்தினால் இதுவரை பதில் முதலமைச்சராக எவரையும் நியமனம் செய்யவில்லை என அறியமுடிகிறது

Allgemein தாயகச்செய்திகள்