யாழ் இளைஞனால் கற்பூரமேற்றி வழிபடப்பட்ட தியாக தீபம்; கண்கலங்கிய சிங்கள மக்கள்!

தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கும் சுதந்திரமான உரிமைக்கும் தன்னுயிரை ஈந்துவந்த, தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தற்போது உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் அவர் தன்னையே மண்ணுக்கு ஈகம் செய்த நாளாகும்.

தியாக தீபம் உண்ணா நோன்பிருந்த யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தின் பின் வீதியிலுள்ள அவர்தம் நினைவிடம் தூய்மைப்படுத்தப்பட்டு தினந்தோறும் மக்களால் ஈகவணக்கம் செலுத்தப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் இவ்விடத்திற்கு நேற்றைய தினம் காலை வருகை தந்த இளைஞரொருவர், நினைவிடத்திற்கு முன்பாக கற்பூரம் ஏற்றி தலை வணங்கினார்.

யாழ் இளைஞனால் கற்பூரமேற்றி வழிபடப்பட்ட தியாக தீபம்; கண்கலங்கிய சிங்கள மக்கள்!

ஆலய வழிபாட்டில் தெய்வங்களை வழிபடுவது போல தனது இருகரங்களையும் கூப்பி, இரு கண்களையும் மூடி ஆத்மார்த்தமாக வணக்கம் செலுத்தினார்.

குறித்த இளைஞனால் உளமுருகி மேற்கொள்ளப்பட்ட  இந்தச் செயற்பாட்டைக் கண்டு அங்கு நின்ற சில தமில் மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் நெகிழ்ச்சியடைந்தனர். மேலும் குறித்த காட்சியைத் தமது கைத்தொலைபேசிகளில் படமாக்கியிருந்தமையினையும் காணக்கூடியதாக இருந்தது.

யாழ் இளைஞனால் கற்பூரமேற்றி வழிபடப்பட்ட தியாக தீபம்; கண்கலங்கிய சிங்கள மக்கள்!

தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் குறித்த இளைஞர் காலை வேளைகளில் நினைவிடம் அமைந்துள்ள பகுதிக்கு வருகை தந்து இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வந்துள்ளதை தாம் கண்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.