தியாகி திலீபனை அனுஷ்டித்து கைதடியிலிருந்து காவடிதாயகப் பக்தர்

தியாக தீபம் திலீபனின் நினைவாக தற்பொழுது யாழ்ப்பாணம் கைதடிப் பிள்ளையார் கோவிலில் இருந்து தாயகப் பக்தர் ஒருவர் காவடி எடுத்துவரும் காட்சி மக்களின் கண்களிலே கண்ணீரை வரவைத்துள்ளது.

குறித்த காவடி இன்று காலை கைதடிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திலீபனின் நினைவிடம் அமைந்துள்ள பகுதியை நோக்கி நகர்ந்துவருகிறது.

 

தமிழ் மக்களின் உன்னதமான சுதந்திர வாழ்வுக்காக சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிரீந்த தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் இன்றாகும். அவர் உயிர் பிரிந்த இன்றைய நாளை உலகத் தமிழர்கள் அனைவரும் உணர்வெளுச்சியுடன் கடைப்பிடித்துவருகின்றனர்.

 

தமிழர் தாயகத்தின் யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அவர் தியாக வரலாறு படைத்த நினைவிடமருகே சிறப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இந் நிலையிலேயே தமிழரின் பண்பாட்டுப் பெறுமானங்களில் ஒன்றான காவடி எடுத்தல் நிகழ்வினை தாயகப் பற்றாளர் ஒருவர் தற்பொழுது மேற்கொண்டுள்ளார்!