ஐ.நாவில் வைக்கோவுக்கு சிறப்பு பாதுகாப்பு – சிங்களவர்கள் தாக்க முயற்சி

மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைக்கோ அவர்களுக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறப்பு பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிங்களச் செயற்பாட்டாளர்களால் ஐ.கோவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதை அடுத்தே இந்தச் சிறப்பு பாதுகாப்பு வைகோவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு வழங்குவதற்காகஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வைகோவை சிங்களர்கள் மிரட்டிய நிலையில் அவருக்கு ஐ.நா சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையில்; பேசிய வைகோ, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டி தனது தனது உரையை நிகழ்த்தினார்.

மனித உரிமைகள் பேரவை உறுப்பினர் நாடுகள், பொது வாக்கெடுப்பின் மூலமாகத் தமிழ் ஈழ தேசத்தை அமைக்க முன்வர வேண்டும் என்றும் வைக்கோ வலியுறுத்தினார்.
கூட்டத்தில் உரையாற்றிவிட்டு வெளியே வந்த வைகோவை சிங்களப் பெண் ஒருவர் வழிமறித்து அவரை திட்டியுள்ளார். பின்னர் அவருடன் சேர்ந்து வந்த சில சிங்களர்கள் அவரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வைக்கோ குற்றம் சுமத்தி இருந்தார்.

வைகோவை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு தனக்கு உரிமை உள்ளது என்று வைகோ வாதாடினார். பிரச்சினை முற்றிய நிலையில், அங்கிருந்த பாதுகாவலர்கள் வைகோவை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து விட்டுள்ளனர்.

ஜெனிவாவில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தமிழ் அமைப்புகள் பலவும் ஐவக்கோவுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று ஐ.நாவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்கள்.

இதனையடுத்து ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் வைகோவிற்கு பாதுகாப்புவவழங்குவதற்காக தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார்கள்