தமிழ் மொழிக்கு இப்போது எத்தனை வயது தெரியுமா?

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றியது மூத்த தமிழ் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அந்த முன்தோன்றிய காலம் என்ன என்பது பற்றி பல மொழியராட்சியாளர்கள் கண்டறியமுயற்சித்தும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மனிதனின் மூளைக்கு எட்டியபடி கணக்கிட்டால், ஆங்கில இலக்கியங்களுக்கு வயது 800, அமெரிக்க இலக்கியங்களுக்கு வயது 400.

ஆனால் திருக்குறளுக்கு வயது 2 ஆயிரம் ஆண்டுகள்.

800 ஆண்டுகள் வயதுடைய ஆங்கில இலக்கியங்கள் இந்தக் காலத்துக்குப் பொருந்தவில்லை.

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளில் மிகப் பெரிய ஜீவனைக் காண்கிறேன் என வினோபா பவே குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்திஜீயின் பிரதம சிஷ்யராக வாழ்வை நடத்திய வினோபா, இந்தியா முழுவதும் பாதயாத்திரை செய்தார்.

இவர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பேசும்போதெல்லாம், திருக்குறளையும் தேவாரத்தையும் குறிப்பிடாமல் பேசியதில்லை.

இப்போது உலகெல்லாம் பேசத் தொடங்கியிருக்கிற பஞ்சசீலக் கொள்கையையும் நான் திருக்குறளில் காண்கிறேன்.

இத்தகைய திருக்குறளை உருவாக்குவதற்கு அதற்கு முன் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் தமிழுக்கு வயது இருந்திருக்க வேண்டும்!“ என்று கூறினார்.

இப்பொழுது கூறுங்கள் தமிழுக்கு எத்தனை வயது என்று!!!!!

Allgemein உலகச்செய்திகள்