ஜெர்மன் அதிபர் தேர்தல்..! ஏஞ்சலா மெர்க்கல் வெற்றி

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மன் நாட்டின் அதிபராக ஏஞ்சலா மெர்க்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

ஜெர்மனி நாடாளுமன்றத் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றிபெற்ற கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் ஜெர்மனி  அதிபராகி இருக்கிறார்.

angel_22069இப்போது, 4-வது முறையாக இந்தத் தேர்தலிலும் அதிபர் பதவிக்கு அவர் போட்டியிட்டார். இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 19-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.

இத்தேர்தலில் அதிபர் வேட்பாளராக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் தற்போதைய அதிபர் ஏஞ்சலா மெர்கலும், சமூக ஜனநாயக கட்சி சார்பில் மார்டின் ஷூல்ஸ்சும் போட்டியிட்டனர். இவர்கள் தவிர இன்னும் ஐந்து பேர், அதிபர் பதவிக்கு போட்டியிட்டிருந்தனர்.

இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஏஞ்சலா மெர்கல் நான்காவது முறையாக அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல் 33.2 சதவீதம் வாக்குகள் பெற்று சாதனை வெற்றி பெற்றார்.

அவரைத் தொடர்ந்து, சமூக ஜனநாயக கட்சி 20.8 சதவீதம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்த நாடுகளில் ஒன்றான, ஜெர்மனியின், முதல் பெண் அதிபரான  ஏஞ்சலா மெர்க்கல் 12 ஆண்டுகளாக அதிபராக தொடர்கிறார்.

இவர் ஆட்சியில், முன்னெப்போதும் இல்லாத வகையில், வேலையில்லாத் திண்டாட்டம் மிகக் குறைந்தளவில் உள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளாதாரம் மிக வலிமையாக உள்ளது. சர்வதேச அரங்கில், அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக ஜெர்மனி திகழ்கிறது.