கிழக்கு இலண்டனில் பயங்கரம் -அசிட் தாக்குதலில் பலர் காயம்

கிழக்கு இலண்டனில் விற்பனை நிலையம் உள்ள ஒரு  பிராந்தியத்தில் , அசிட் வீச்சு சம்பவம் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளது . இங்கிலாந்தின் வெஸ்ட்பீல்ட், ஸ்ரத்போர்ட்Westfield, Stratford அருகே , ஒரு குழுவினர் எதோ ஒரு திரவத்தை அங்கு நடமாடுபவர்கள் மீது வீசிக்கொண்டிருந்தார்கள் என்றும் அந்தப் பகுதியில் வெவ்வேறு இடங்களில் பலர் காயப்பட்டார்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர் .

அவசர மருத்துவ சேவைப் பிரிவினர் ஸ்ரத்போர்ட் ரியூப்  ரயில் நிலையமருகே ஒருவருக்கு  சிகிச்சை அளிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது . இது சம்பந்தமாக ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .அருகே உள்ள பெர்கர் கிங் உணவு நிலையத்தின் முகாமையாளர் ஹசன் என்பவர் , முகத்தில் உள்ள அசிட்டை கழுவ , தங்கள் “பாத்ரூமை” உபயோகிக்க ஒருவர்  ஓடி வந்தததைக் கண்டதாக் கூறி இருக்கிறார்  .

ஒருவருக்கு    மட்டும்  அசிட்டை  வீசவில்லை. பலர் கூட்டமாக நின்ற இடத்தில் வீசினார்கள் . ஒருவர் கண்ணில் தாக்கப்பட்டு , என்னால் பார்க்க முடியவில்லைஎன்று அவர் எரிச்சலோடு அலறுவதை நான் கண்டேன்“ என்று நேரில் சம்பவத்தைக்  கண்ட இன்னொருவர் கூறி இருக்கிறார் .

மெட்ரோ பொலிசாரின் பேச்சாளர் ஒருவர் , இச் சம்பவத்தை தாம் ஒரு பயங்கரவாதச் சம்பவமாக எடுப்பதாக கூறி இருக்கிறார்கள் . நேற்று சனிக்கிழமை இரவு 8மணியளவில் இச் சம்பவம் நடந்ததாகவும், அறுவர் காயப்பட்டிருக்கலாம் என்றும் இலண்டன் மெட்ரோ இணையச்  செய்திகள் கூறுகின்றன

Allgemein உலகச்செய்திகள்