இரு வேறு இடங்களில் மீட்கப்பட்ட ஆண்களின் சடலங்கள் -தற்கொலையா? கொலையா?

கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பாழடைந்த கட்டட பகுதியில் சடலம்  ஒன்று காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கிடைத்த தகவலிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பகுதியில் நச்சு மருந்து மணம் வீசுவதை அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை உயிரிழந்த நபர் தொடர்பில் அடையாளம் காணும் நடவடிக்கைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு இந்து மயானத்திற்கு அருகாமையில் உள்ள காணியொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணில் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்  காரைதீவைச் சேர்ந்த வடிவேல்பிள்ளை யோகராசா (வயது 59, மீனவர்) என தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Allgemein