முன்னாள் போராளிகளும் மனிதர்களே, இளஞ்செழியன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று யாழ். மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த 5 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்வதற்கு சதி திட்டம் திட்டிய வழக்கு தொடர்பில் அறிக்கைகள் எதுவும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கிளிநொச்சி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தில்லைநாதன் அச்சுனா தெரிவித்தார்.

முன்னாள் போராளிகளும் மனிதர்களே, இளஞ்செழியன் இதற்கு அரச சட்டத்தரணி நாகரட்னம் நிஷாந் விசாரணைகள் இன்னும் நிறைவடையாமையினால் பிணை வழங்கினால் சந்தேகநபர்கள் நாட்டை விட்டு தப்பி செல்ல வாய்ப்புள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

இருவரின் வாத பிரதிவாதங்களை கேட்டறிந்த யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் இலங்கை அரசியல் சட்டத்திற்கு அமைய குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் வரையில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சந்தேகநபர்களாகவே கருதப்படுவார்கள்.

முன்னாள் போராளிகள் என்பதற்காக அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைப்பது அவர்களின் நடமாடும் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதிக்கும்.

இதனை கருத்தில் கொண்டு சந்தேகநபர்கள் ஐவருக்கும் நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Allgemein தாயகச்செய்திகள்