வன்னியில் தமது நிலைகளை பலப்படுத்தி வரும் ஸ்ரீலங்கா இராணுவம்

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தொடர்ந்தும் தமது நிலைகளை வன்னியில் பலப்படுத்தி வருவதாக பிரதேச மக்களால் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – பூநகரி – மன்னார் வீதியில் வேரவில் சந்தியில் இருந்து வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் படை அணிகள் பயிற்சி அணிவகுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

கடந்த சனிக்கிழமை குறித்த பயிற்சி இடம்பெற்றுள்ளது.

இந்தப் பயிற்சியின் அணிவகுப்பு நடவடிக்கை பிரதான வீதிகள் ஊடாகவும் இடம்பெற்றது. இதில் சிறிலங்கா படையின் பல பிரிவுகள் பங்குபற்றியிருந்தன.

இந்நிலையில் இராணுவத்தினர் வன்னியில் தமது நிலைகளை பலப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வன்னியில் படையினர் தமது முகாம்களில் புதிய கட்டுமானங்களை மேற்கொண்டு அவற்றைப் பலப்படுத்தி வருவதாகவும், அதேவேளை, காட்டுப் பகுதிகளில் புதிய முகாம்களும் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Allgemein