ஒன்று படுங்கள் ஈழத்தமிழர்களேஎம்மை நாம் ஆளுவோம் ..!பாகம்(7)

எமது இனத்துக்கான தேவை என்ன என்பதை எமத முந்தையர் அறவழிப்போராட்டம் எடுத்துரைத்ததை நாம் அறிவோம்,

ஆனால் விடுதலையின்பால் தெளிவு அற்ற அரசியல் வாதிகளால் மக்கள் இருவேறு களங்களில் போராடவேண்டியுள்ளது,

வீழ்ந்த உயிர்களின் சமாதியில் நின்று அரசில்களம்சென்றவர்கள் நேக்கு வேறாக உள்ளதால் இவர்களை எதிர்த்து ஒருபோராட்டமும் எமது உறவுகளை அழித்துஉல்லாசம்காணும்அரசுக்காகவும்அல்லதுஅரசுகளுக்காகவும்ஒருபோராட்டமும்

எமது இத்தனை ஆண்டு போராட்டத்தை பாரண்ட அரசுகளுடன் நசுக்கிய அரசுக்கு துணைபோகும் அரசியல்வாதிகள்செத்த பிணங்களில் நின்று பணம் தேடுவது சரியா..?

பிணமான மக்கள் எமது நலம்காண போராடிய வீரர்கள் கண்ட கனவதில் தனிமனித பணம் சேர்பு அல்லது உங்கள் சுபபோகவாழ்வுக்காய் எமது மண்ணை விற்றுப்பிளைப்பது என்பதை நீங்கள் அறவே நிறுத்த எண்ணாவிடில் இருக்கின்ற எம்மினத்தின் மிஞ்சியுள்ள தமிழர்களும் அஞ்சி வாழ்வதுமட்டுமல்ல அழிந்து போவதர்க்கு துணையாவதை அறியாதவர்களாகிறீர்கள் என்று சொல்வதில்பார்க்க அழிபவர் அழியட்டும் என்று வாழ்கிறீர்கள்

2009 விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்டம் மௌனித்தபோது நீங்கள் இருந்த கொள்கைக்கும் இப்போது உள்ள உங்கள் கொள்கைக்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளது மட்டுமல்ல ஆட்சிக்குவருமட்டும் ஆட்க்காளை சந்தித்து
வாக்குகேட்டு வசதியால் அரசியல்வாழ்வு வந்ததும் வாக்களித்தவர்கள் வாசல்தேடி வந்தாலும் நீங்கள்பார்க்கத்தயார் இல்லை ,

எமது தாய்மண்ணை நீங்கள் தானம் செய்வதற்கான செயலில் இறங்கி உள்ளீர்களா..?

அல்லது மக்கள் உறங்கியுள்ளார்கள் என்ற நினைவா ?

மக்கள் விழிப்புடன்தான் உள்ளார்கள் என்பதை அடுத்த உங்கள் ஆட்சிக்காலத்தில் புரியவைப்பார்கள் என்பதே உண்மை உறுதி அப்போது தெரியும் உங்கள் அறுதி முடிவுகள் என்பதை மறக்காமல் இருங்கள்,

ஒன்று படுங்கள் ஈழத்தமிழர்களேஎம்மை நாம் ஆளுவோம் பாகம் (8) தொடரும்

ஈழத்தமிழன்

Allgemein தாயகச்செய்திகள்