லண்டன் ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு:

மேற்கு லண்டனில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் படுகாயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலருக்கும் முகங்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் லண்டன் மெட்ரோ ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.

லண்டன் மெட்ரோ ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு: பதறவைக்கும் வீடியோ காட்சிகள்

இதிலிருந்து தப்பி வந்தவர்கள் கூறுகையில், அங்கு இருந்த ஒரு பக்கெட்டில் இருந்து வெடித்ததாகவும், அதிலிருந்து சில வயர்கள் வெளியில் தென்பட்டதாகவும் கூறியுள்ளனர். தற்போது அங்கு விரைந்துள்ள போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

லண்டன் மெட்ரோ ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு: பதறவைக்கும் வீடியோ காட்சிகள்