ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்த சதுரிக்கா சிறிசேன

இந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் யுத்தத்தால் நிறைய பெண்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். உங்கள் தந்தை 2015ஆம் ஆண்டு முழு நாட்டிற்கும் ஜனாதிபதியானார், பெண் செயற்பாட்டாளர் என்ற வகையில், உங்கள் தந்தை அந்த பெண்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பார் என நம்புகின்றீர்களா? என எமது ஐ.பி.சி தமிழ் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலிளிக்கையில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். சதுரிக்கா சிறிசேன “அவர் அந்த மக்களுக்கு நியாயத்தை வழங்குவார் என நான் நினைக்கின்றேன். எனது தந்தை யாழ். மாவட்டத்திற்கே விஜயம் மேற்கொள்கின்றார். அந்த மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துகின்றார்.

அவர்கள் இழப்புகள், பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினை வழங்குவார் என்பது எனது நம்பிக்கை. போதைப்பொருள் தொடர்பில் பேசுகின்றார்.

அது தொடர்பில் தெளிவுபடுத்தல்களை முன்னெடுக்கின்றார். ஆகவே தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம்கள் என இனம், நிறம் பாராது அவர் பணியாற்றுவார் என்பது எனது நம்பிக்கை

Allgemein