யாழில் சடலத்துடன் சென்றவர் சடலமான சோகம்

யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் ஹயஸ் ரக வாகனமொன்று மதிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில், வாகன சாரதியான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏ9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற இவ் விபத்தில், யாழ்.மணிக்கூட்டு வீதியைச் சேர்ந்த நவராசா (வயது – 67) என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.

இறந்த ஒருவரின் சடலத்தினை வவுனியாவிற்கு கொண்டு சென்று ஒப்படைத்துவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை யாழ். போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Allgemein தாயகச்செய்திகள்